என் கேள்விக்கென்ன பதில்

பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி தேர்தலில் தனிப்பெரும் வெற்றி பெற்றிருப்பது நமக்கு நன்மை தந்திடுமா?
- ஆர்.பாலசுப்ரமணியன், மயிலாடுதுறை
 

 இம்ரான்கான் கட்சி வெற்றி பெற்றாலும் அது இதர கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்திட முடியும். அதோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த நாட்டு இராணுவம் தான் முக்கிய விஷயங்களை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவு மேம்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
 

கர்நாடக அரசு தற்போது தாராளமாக காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது கோர்ட் உத்தரவுப்படி அல்ல என்றும் அவர்களின் அணைகள் நிரம்பி உடைந்து விடக்கூடாது என்பதற்காக தான் என்பது உண்மையா?
- எம்.ஸ்ரீதரன், ஸ்ரீரங்கம்
 

 உண்மைதான். அதே சமயம் அவர்கள் கொடுத்த நீரின் அளவு மற்றும் மாதா மாதம் கொடுக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவைகளை காவிரி ஆணையம் கண்காணிக்கும் என்பதனால் இவ்விஷயத்தில் தமிழகம் அச்சப்படத் தேவையில்லை என்று சொல்லப்படுகின்றது.


கோர்ட் நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்திடுவது நன்மை பயக்குமா?
- கே.ரகுநாதன், மதுரை
 

 ஓரளவு நன்மை பயக்கும். அதே சமயம் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் கௌரவத்தினையும், மரியாதையினையும் குறைத்திடும் அபாயம் உள்ளது. மிகவும் சிந்தித்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம்.

என் கேள்விக்கென்ன பதில்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அர்த்தமுள்ள வளர்ச்சி பெற்றிடுமா?
- ஜெ.சீனிவசன், ராமநாதபுரம்
 
Read More ..
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS