என் கேள்விக்கென்ன பதில்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியினை பிரதமர் வேட்பாளராக பல எதிர்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்?
பி.கேசவன், கும்பகோணம்
 

முதல் காரணம் காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநிலங்களில் வலுவான நிலையில் இல்லை. இரண்டாவது காரணம் ராகுல்காந்தி அவர்களுக்கு அனுபவமும், அரசியல் முதிர்ச்சியும் இல்லை என்பது தான். பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான ஓர் வலுவான வேட்பாளரை எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்த முடியாது. இதுவும் மோடி அவர்களுக்கு சாதகமான அம்சமாக அமைந்திடும்.
 

சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதில் பெறும் சிக்கல் உருவாகும் என்று சொல்லப்படுகிறதே?
கே.நாராயணஸ்வாமி, மயிலாப்பூர்
 

சென்னைக்கு குடிநீர் வழங்கிவரும் ஏரிகள் வற்றத் துவங்கி உள்ளன. தமிழக அரசு வீராணம் ஏரியிலிருந்து நீரினை சென்னைக்கு கொண்டு வந்து உதவினால் மட்டுமே சென்னை நகரின் குடிநீர் தேவை சமாளிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


மத்திய அரசில் ஊழல் என்பதே இல்லை என்று பா.ஜ.க கூறிக் கொள்வது சரிதானா?
எம்.லக்ஷ்மி, திருநின்றவூர்
 

சரிதான். இன்று வரை எந்தவொரு ஊழல் புகாரும் மத்திய அரசின் மீது ஆதாரங்களோடு சொல்லப்பட்டதில்லை. குறிப்பாக நரேந்திர மோடி அவர்கள் மிகக் கடுமையான செயல்முறைகளை வகுத்துக் கொடுத்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் தக்க முறையில் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகின்றது

என் கேள்விக்கென்ன பதில்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியினை பிரதமர் வேட்பாளராக பல எதிர்கட்சிகளும் ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்?
பி.கேசவன், கும்பகோணம்
 
Read More ..
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS