என் கேள்விக்கென்ன பதில்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தடாலடியாக பேசி வருவதும், சிறு சிறு விஷயங்களுக்கும் கூட பிரதமர் மோடி அவர்களை விமர்சிப்பதும் சரியான அணுகுமுறையா?
எம்.விஸ்வநாதன், சிவகாசி

ஓர் எதிர்கட்சித் தலைவர் குறிப்பாக தேர்தல்களை சந்திக்க இருக்கின்ற தலைவர் வழக்கமாக செய்கின்ற அரசியல் செயல்பாடுகள் தான் இவை. ஒருசில விஷயங்களில் ராகுல் காந்தியின் கருத்துக்கள் குழந்தைத்தனமாக இருப்பதனையும் காண்கின்றோம்,


தற்போதைய தமிழக அதிமுக ஆட்சி மத்திய பாஜகவின் கைப்பாவை என்று சொல்லப்படுவது சரியா?
கே.நாகராஜன், திருச்சி
 

மத்திய பாஜக ஆட்சியும், தமிழக அதிமுக ஆட்சியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டியவர்கள் அரசியல் லாபத்திற்காக மக்களின் தீர்ப்பினை கொச்சைப் படுத்துவது சரி அல்ல.


தற்போதைய தமிழக அதிமுக ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் இல்லை என்று சொல்லப்படுவது சரியா?
எஸ்.புருஷோத்தமன், பெருங்களத்தூர்
 

இது உண்மைக்கு புறம்பான தகவல், தமிழகத்தில் கருத்து சுதந்திரமும், பத்திரிக்கை சுதந்திரமும் கொடி கட்டி பறக்கின்றன. கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக ஆட்சியை காட்டிலும் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியை காட்டிலும் தற்போது ஆட்சியிலுள்ள நுஞளு, டீஞளு அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரமும், பத்திரிக்கை சுதந்திரமும் சிறப்பாக உள்ளன.

என் கேள்விக்கென்ன பதில்
நடிகர் கமல்ஹாசன் மிகவும் அதிகமாக பேசுவது போல் தெரிகின்றதே?
கே.நடராஜன், விருகம்பாக்கம்
Read More ..
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS