![]() |
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நமஸ்காரம்.
சமீபத்தில் நக்கீரன் வார இதழ் கற்பனையான ஓர் பொய்ச் செய்தியை ஆதாரமாக அவர்களே உருவாக்கி தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை கேவலப்படுத்தியும், பிராமண சமூக உணர்வுகளை கொச்சைப்படுத்தியும் ஓர் பிரதான கட்டுரை வெளியிடப்பட்டது. இதனைப் படித்த தமிழக மக்கள் நக்கீரன் பற்றியும் அதனுடைய ஆசிரியர் கோபால் பற்றியும் அருவருப்புடனும், வெறுப்புடனும் பேசி வந்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அஇஅதிமுகவின் தலைவியும். தமிழக முதல்வருமாகிய செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களை பற்றி அவதூறு செய்தி வெளியிட்டமைக்கு முதல்வர் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றமும் நக்கீரன் பத்திரிகையின் கீழ்த்தரமான செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. |






